Home /News /entertainment /

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தமிழ், இந்தி இரு மொழிப் படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தமிழ், இந்தி இரு மொழிப் படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

Vijay Antony: விஜய் ஆண்டனி  நடிப்பில் தமிழரசன், அக்னிசிறகுகள், காக்கி ஆகிய படங்கள் நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு திரைப்படமாக வெளிவர இருக்கின்றன.

  • News18
  • Last Updated :
இன்றைய தேதியில் அதிக படங்கள் நடிக்கும் தமிழ் கதாநாயகர்களில் விஜய்சேதுபதிக்கு கடும் போட்டியாக இருப்பவர் விஜய் ஆண்டனி. ஏற்கனவே அரை டஜனுக்கும் மேல் படங்கள் கைவசம் இருக்கையில் மேலும் இரு படங்களை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

விஜய் ஆண்டனி  நடிப்பில் தமிழரசன், அக்னிசிறகுகள், காக்கி ஆகிய படங்கள் நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு திரைப்படமாக வெளிவர இருக்கின்றன. பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் ஆகிய நான்கு படங்கள் தயாரிப்பில் உள்ளன. ஆக, இப்போதே ஏழு படங்கள் கைவசம் வைத்திருக்கும் விஜய் ஆண்டனி புதிதாக மேலும் இரு படங்களை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு திரைப்படத்தை சுசீந்திரன் இயக்குகிறார்.

சென்ற வருட ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படத்தை இயக்கி வெளியிட்டார் சுசீந்திரன். இந்த வாரம் ஜெய்யை வைத்து அவர் இயக்கியிருக்கும் வீரபாண்டியபுரம் வெளியாகிறது. இப்போது விஜய் ஆண்டனி படத்தையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைக்கிறார் பொதுவாக விஜய் ஆண்டனி படங்களுக்கு அவர்தான் இசையமைப்பார் ஒரு மாறுதலாக சுசீந்திரன் படத்தில் விஜய் ஆண்டனிக்குப் பதில்  டி இமான் இசையமைக்கிறார். கிராமத்துப் பின்னணியில் இந்தப் படம் தயாராகிறது.

Also read... நயன்தாராவின் காட்பாதர் அப்டேட்டை வெளியிட்ட மோகன் ராஜா

இன்னொரு திரைப்படம் தமிழ் இந்தி இரு மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ் சிவன் இயக்கயிருக்கிறார். இந்தப் படங்கள் குறித்து மேலும் விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Vijay Antony

அடுத்த செய்தி