ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

2 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வரும் விஜய் ஆண்டனியின் தமிழரசன்!

2 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வரும் விஜய் ஆண்டனியின் தமிழரசன்!

தமிழரசன்

தமிழரசன்

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி சமூக நலனிற்காக போராடும் மனிதனாக நடித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் ஆண்டனி நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் தமிழரசன் திரைப்படம் வரும் நவம்பர் 18-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

  தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது, பல சுவாரஸ்யமான படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அவற்றில் ஒன்று இசைஞானி இளையராஜாவின் இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் 'தமிழரசன்'.

  இந்தப் படம் 2020-ஆம் ஆண்டின் முற்பகுதியில் பெரிய திரைகளில் வரவிருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக தள்ளிப்போனது. இதற்கிடையே தற்போது, 'தமிழரசன்' படத்தை நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

  ரஞ்சிதமே ரஞ்சிதமே... வெளியானது விஜய் குரலில் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!

  Vijay Antony Tamilarasan is coming to the screen after 2 years, vijay antony wife, vijay antony songs, vijay antony age, vijay antony tamil movies, vijay antony father, tamilarasan movie website, tamilarasan new movies, tamilarasan tamilrockers, tamilarasan.com 2022, tamilarasan isaimini, tamilarasan telegram, tamilarasan dubbed movies, விஜய் ஆண்டனி, விஜய் ஆண்டனி தமிழரசன், தமிழரசன் படம், விஜய் ஆண்டனி படம்
  தமிழரசன்

  இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி சமூக நலனிற்காக போராடும் மனிதனாக நடித்துள்ளார். சோனு சூட் மற்றும் சுரேஷ் கோபி முக்கிய வேடங்களில் நடித்துள்ள இதில், ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கிறார். அதோடு படத்தின் புதிய ட்ரெய்லர் மற்றும் மீதமுள்ள பாடல்களை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Vijay Antony