Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பலத்த காயத்திலிருந்து குணமடைந்து வருகிறேன்... விஜய் ஆண்டனி ட்வீட்!

பலத்த காயத்திலிருந்து குணமடைந்து வருகிறேன்... விஜய் ஆண்டனி ட்வீட்!

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட பலத்த காயத்தில் இருந்து நான் குணமடைந்து வருகிறேன்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தான் குணமாகி வருவதாக இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். 

விஜய் ஆண்டணி நடிப்பில், இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு அவரின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையையும் ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதனை விஜய் ஆண்டனியே இயக்கியும் வருகிறார்.

இந்நிலையில் மலேசியாவில் நடந்த படப்பிடிப்பின்போது, அவருக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சென்னையில் சிகிச்சைப் பெற்று வரும் விஜய் ஆண்டனி, தனது உடல்நலம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “அன்பு நண்பர்களே, மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட பலத்த காயத்தில் இருந்து நான் குணமடைந்து வருகிறேன். தற்போது நான் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை முடித்துள்ளேன். கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுக்கும், எனது உடல்நிலையில் அக்கறை காட்டியதற்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்டத்தை நெருங்கும் விஜய் டிவி-யின் பாரதி கண்ணம்மா?

இதையடுத்து விஜய் ஆண்டனி விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vijay Antony