முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன... விஜய் ஆண்டனி மகிழ்ச்சி

தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன... விஜய் ஆண்டனி மகிழ்ச்சி

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

Vijay Antony : தான் 90% குணமடைந்துவிட்டதாக இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் ஆண்டணி நடிப்பில், இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு அவரின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையையும் ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதனை விஜய் ஆண்டனியே இயக்கியும் வருகிறார்.

இதற்கிடையே மலேசியாவில் நடந்த படப்பிடிப்பின்போது, அவருக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட பலத்த காயத்தில் இருந்து தான் குணமடைந்து வருவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது உடல்நிலை குறித்து பதிவிட்டுள்ள விஜய் ஆண்டனி, “அன்பு இதயங்களே நான் 90% குணம் அடைந்து விட்டேன்.  உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vijay Antony