தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கும் ‘பிச்சைக்காரன் 2’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கும் ‘பிச்சைக்காரன் 2’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் விஜய் ஆண்டனி
  • Share this:
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் பிச்சைக்காரன். வசதி வாய்ப்புள்ள விஜய் ஆண்டனி, கோமா நிலையில் உள்ள தனது அம்மாவைக் காப்பாற்ற பிச்சைக்காரனாக வாழ்கிறார்.

பிச்சைக்காரர்களின் வாழ்க்கையையும், பணம்படைத்த ஒரு நபருக்கு பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பதையும் சுவாரஸ்யமாக திரையில் சொல்லியிருப்பார் சசி.

தமிழில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த இந்தப் படம் தெலுங்கில் பிச்சகாடு என்ற டைட்டிலுடன் டப் செய்து வெளியிடப்பட்டது. தெலுங்கிலும் வசூலில் சக்கைபோடு போட்ட இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. பிச்சைக்காரன் 2 படத்துக்கான கதையை விஜய் ஆண்டனி எழுதியுள்ளார். இக்கதையை தேசிய விருது பெற்ற பாரம் பட இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு பிச்சைக்காரன் 2 பட அறிவிப்புடன் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading