Home /News /entertainment /

விஜய் ஆண்டனி நடிக்கும் ’கொலை’ படத்தில் 1200 கிராபிக்ஸ் ஷாட்கள்!

விஜய் ஆண்டனி நடிக்கும் ’கொலை’ படத்தில் 1200 கிராபிக்ஸ் ஷாட்கள்!

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

இறுதிவரை அந்த கொலையை யார் செய்தார்கள் என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கும் என படக் குழுவினர் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலை திரைப்படத்தில் 1200 கிராபிக்ஸ் ஷாட்ஸ் உள்ளதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விஜய் ஆண்டனி நடிப்பில் பாலாஜி குமார் இயக்கியுள்ள திரைப்படம் கொலை.  இந்த திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகைகள் ரித்திகா சிங்,  மீனாட்சி சவுத்ரி,  இயக்குனர் பாலாஜி குமார் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர். அதேபோல் இயக்குனர்கள் மிஷ்கின், மிலிந்த் ராவ்,  சி.எஸ். அமுதன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இதில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஒரு படத்திற்கு மொத்தமாக 1700 ஷாட்டில் இருந்து,  1800 ஷார்ட்டுகள் வரை மட்டுமே தேவைப்படும்.  ஆனால் இந்த திரைப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிக்கான ஷாட் எண்ணிக்கை மட்டும் 1200 என கூறினார். கொலை திரைப்படத்தின் கதை ஒரு கொலையை கண்டுபிடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.  இறுதிவரை அந்த கொலையை யார் செய்தார்கள் என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கும் என படக் குழுவினர் தெரிவித்தனர்.

vijay antony kolai movie press meet vijay antony next flim update kolai ready to release
கொலை படத்தின் செய்தியாளர் சந்திப்பு


கொலை திரைப்படத்தில் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும் எனவும் கூறினர்.  அதேபோல் இந்த படத்தின் இயக்குநர் பாலாஜி குமார் பேசுகையில்  விஜய் ஆண்டனி மூலம்தான் கொலை படம் சாத்தியமானது. அவர் இந்த திரைப்படத்தின் கதை மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார் என கூறினார். மேலும் இந்த திரைப்படம் வெற்றியடைந்தால் அதற்கான பாராட்டுக்கள் அனைத்தையும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கொடுப்பதாகவும்,  ஒருவேளை படம் தோல்வி அடைந்தால் அதற்கான முழு பொறுப்பையும் தான் எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

vijay antony kolai movie press meet vijay antony next flim update kolai ready to release
கொலை படத்தின் செய்தியாளர் சந்திப்பு


அதேபோல் ரித்திகா சிங் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் இந்த திரைப்படத்தின் கதை மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.  இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சி என தெரிவித்தனர். இறுதியாக பேசிய விஜய் ஆண்டனி கொலை திரைப்படம் நல்ல படமாக இருக்கும் என்று நம்புவதாகவும்,  தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்ததாகவும் பாராட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Kollywood, Tamil Cinema, Vijay Antony

அடுத்த செய்தி