• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Amazon Prime : விரைவில் ஓடிடியில் வெளியாகும் கோடியில் ஒருவன்..

Amazon Prime : விரைவில் ஓடிடியில் வெளியாகும் கோடியில் ஒருவன்..

அமேசான் பிரைம்

அமேசான் பிரைம்

Amazon Prime Video : கோடியில் ஒருவன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ வாங்கியுள்ளது. 

  • Share this:
    நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, சோனிலிவ், டிஸ்னி + ஹாட் ஸ்டார், ஸீ 5 போன்ற முன்னணி ஓடிடி நிறுவனங்கள் படங்களைப் போட்டிப் போட்டு வாங்குகின்றன. நேரடியாக ஓடிடியில் வெளியிட மட்டுமின்றி, திரையரங்கில் வெளியான பின், ஓடிடியில் வெளியிடுவதற்கும் படங்களை இந்நிறுவனங்கள் வாங்குகின்றன. மாஸ்டர், கர்ணன், சுல்தான், தலைவி போன்ற படங்கள் திரையரங்கில் வெளியான பின் ஓடிடியிலும் வெளியாகின. இதில் கர்ணன் படத்தை ஓடிடியில் அதிகம் பேர் பார்த்தனர். 

    கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் திரையரங்கில் வெளியான படங்களில் முதலுக்கு மோசம் செய்யாத முதல் படம் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன். ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருந்த இந்தப் படம் பரவலான வரவேற்பையும், வசூலையும் பெற்றது. ஆத்மிகா நாயகியாக நடித்திருந்தார். படத்தின் சண்டைக் காட்சிகளும், சென்டிமெண்ட் காட்சிகளும் வொர்க் அவுட்டானதால் படம் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது.

    also read: கன்னட நடிகரை குறி வைக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்..

    இந்தப் படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் வீடியோ வாங்கியுள்ளது. திரையரங்கில் வெளியாகும் படத்தை நான்கு வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களும்,விநியோகஸ்தர்களும் நிபந்தனை விதித்துள்ளனர். அதனால், அடுத்த மாதம் கோடியில் ஒருவன் ஓடிடியில் வெளியாகலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: