பாலிடிக்ஸ்... விஜய் ஆண்டனியின் அதிரடி முடிவு

அரசியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாக உள்ளது.

news18
Updated: February 10, 2019, 6:22 PM IST
பாலிடிக்ஸ்... விஜய் ஆண்டனியின் அதிரடி முடிவு
விஜய் ஆண்டனி - நடிகர்
news18
Updated: February 10, 2019, 6:22 PM IST
விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் ‘கொலைகாரன்’, ‘அக்னிச் சிறகுகள்’ என இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாபு யோகேஸ்வரன் இயக்கிவரும் ‘தமிழரசன்’ படத்தில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, தற்போது மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

2014-ம் ஆண்டு விதார்த் நடிப்பில் வெளியான ‘ஆள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஆனந்த கிருஷ்ணன். அந்தப் படம் பெரியளவில் கவனம் பெறவில்லை. அதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘மெட்ரோ’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அசோக் செல்வனை கதாநாயகனாகக் கொண்டு அவர் இயக்கி வந்த ‘ஆக்ஸிஜன்’ திரைப்படம் நிறைவடையாமல் நின்றுள்ள நிலையில் அடுத்த படத்தை தொடங்கியுள்ளார்.

என் வாழ்வில் இந்த 3 ஆண்கள் முக்கியமானவர்கள் - சவுந்தர்யா ஒபன் ஸ்டேட்மெண்ட்?
Loading...


அரசியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாக உள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான காளி, திமிரு புடிச்சவன் ஆகிய இரு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சவுந்தர்யா திருமண வரவேற்பில் தனுஷ் ஏன் ஆர்வம் காட்டவில்லை தெரியுமா?

இயக்குநருக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் கருணாகரன் ... நடந்தது என்ன - வீடியோ

First published: February 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...