• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் ஆண்டனியின் கொலை எந்தப் படத்தின் இன்ஸ்பிரேஷன்...?

விஜய் ஆண்டனியின் கொலை எந்தப் படத்தின் இன்ஸ்பிரேஷன்...?

கொலை

கொலை

ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். 

  • News18
  • Last Updated :
  • Share this:
கோடியில் ஒருவன் படத்தைத் தொடர்ந்து இன்ஃபினிட்டி பிலிம் வென்ஜர்ஸ் நிறுவனத்துடன் விஜய் ஆண்டனி கைகோர்க்கும் படம் கொலை. ஏற்கனவே விஜய் ஆண்டனி கொலைகாரன் படத்தில் நடித்துள்ளார். அதில் பாதியைச் சுருக்கி, இந்தப் புதிய படத்துக்கு கொலை என்று பெயர் வைத்துள்ளனர். 

இதன் தயாரிப்பில் லோட்டஸ் பிக்சர்ஸும் இணைகிறது. இது மலேசியாவை மையமாக வைத்து இயங்கும் நிறுவனம். கொலையை பாலாஜி கே.குமார் இயக்குகிறார். ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்

சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். மகேஷ் மேத்யூ சண்டைப் பயிற்சி, எடிட்டிங் செல்வா ஆர்.கே., ஆறுசாமி கலை இயக்கம். படத்தில் ஸிஜி வேலைகள் அதிகம் உள்ளதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது



கொலை படத்தை இயக்கும் பாலாஜி கே.குமார் இதற்கு முன் பூஜா நடித்த விடியும் முன் படத்தை இயக்கியுள்ளார். 2013 இல் இந்தப் படம் வெளிவந்தது. படத்தைப் பார்த்தவர்கள் சிறப்பான படம் என பாராட்டினர். அதில் ஒரு சிக்கல், விடியும் முன் படம், 2006 இல் வெளிவந்த லண்டன் டூ பிரைட்டன் என்ற பிரிட்டீஷ் படத்தை தழுவி எடுக்கப்பட்டது.

Also read... மார்வெல் ரசிகர்கள் ஏமாற்றம் - தள்ளிப்போகும் சூப்பர் ஹீரோ படங்கள்!

2013 இல் இப்போது போல் சமூகவலைத்தளங்கள் உக்கிரமாக இல்லை. இருந்திருந்தால் தகவல் லண்டன் டூ பிரைட்டன் தயாரிப்பாளர் காதுகளுக்கு போயிருக்கும். லம்பாக கப்பம் கட்டியிருந்திருப்பார்கள். விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் படமும்கூட பெர்பெக்ட் நம்பர் என்ற கொரிய படத்தின் தழுவல்தான்



மேலே உள்ள விஷயங்களை கூட்டிக்கழித்து, கொலை எந்தப் படத்தின் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என்று கோடம்பாக்கத்தில் பெட்டிங் நடக்கிறது. விடியும் முன் படத்தை எடுத்தபின் யுஎஸ் சென்ற பாலாஜி கே.குமார் கொலை படத்துக்காக சென்னை திரும்பியிருக்கிறார். இத்தனை வருடங்களில் நிறைய இன்ஸ்பயர் ஆகியிருக்க வாய்ப்பிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: