ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விஜய் ஆண்டனிக்கு விபத்து - மருத்துவமனையில் அனுமதி

பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விஜய் ஆண்டனிக்கு விபத்து - மருத்துவமனையில் அனுமதி

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு மலேசியா நாட்டில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்று வந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு கோடியில் ஒருவன் படம் வெளியாகியிருந்தது. கடந்த ஆண்டு அவரது நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. மேலும் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் என வரிசையாக வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. பிச்சைக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு பிச்சைக்காரன் 2 படத்தை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கவும் செய்கிறார்.

பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு மலேசியா நாட்டில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்றுவந்தது. அங்கு இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டுவந்தன. இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி காயமடைந்தார். இதனையடுத்து அவர் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் உடல் நலம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்னி சிறகுகள் படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து விஜய் ஆண்டனி நடித்துள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி.சிவா தயாரிக்கும் இப்படத்தை மூடர் கூடம் நவீன் இயக்கியுள்ளார். மேலும் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படவும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள தமிழரசன் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

தனது படங்களில் நடிப்பு, தயாரிப்பு, இசை என பணியாற்றி வரும் விஜய் ஆண்டனி, தனது சில படங்களுக்கு படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுவருகிறார். அண்ணாதுரை, திமிரு பிடிச்சவன், கோடியில் ஒருவன் படங்களுக்கு இவர் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Accident, Vijay Antony