முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கோலிவுட்டில் முதல்முறை.. முதல் 4 நிமிட காட்சிகளை வெளியிடும் பிச்சைக்காரன் 2 படக்குழு!

கோலிவுட்டில் முதல்முறை.. முதல் 4 நிமிட காட்சிகளை வெளியிடும் பிச்சைக்காரன் 2 படக்குழு!

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

வழக்கம்போல் இல்லாமல், படத்தின் முதல் 4 நிமிட காட்சிகளை வெளியிடுவதாகவும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் 4 நிமிட காட்சிகள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு அவரே படத்தையும் இயக்கியிருக்கிறார். பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றபோது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது குணமடைந்து ஓய்வில் இருக்கும் விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் 2 படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார். வழக்கம்போல் இல்லாமல், படத்தின் முதல் 4 நிமிட காட்சிகளை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த ட்விட்டர் பதிவில், பணம் உலகை காலி பண்ணிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு பிச்சைக்காரன் 2 கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vijay Antony