விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தை ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு மழை பிடிக்காத மனிதன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனியின் நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி அவருக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கின. விஜய் ஆண்டனியின் படம் என்றால் வித்தியாசமான கதையும், கச்சிதமான திரைக்கதையும் இருக்கும் என்ற பெயர் உருவானது. ஆனால், அடுத்தடுத்து வெளியான படங்கள் அந்த நம்பிக்கையை குலைத்தன. பல வருடங்களுக்குப் பிறகு கொலைகாரன் படம் விஜய் ஆண்டனிக்கு ஒரு பிரேக்காக அமைந்தது. சமீபத்தில் வெளியான கோடியில் ஒருவன் அதனை தக்க வைத்தது. விஜய் ஆண்டனி தனது ட்ராக்குக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் எனலாம்.
இந்நிலையில், விஜய் மில்டனின் மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகியுள்ளார். இதில் முக்கியமான வேடத்தில் சரத்குமார் நடிக்கிறார். இவர்கள் இணைவது இதுவே முதல்முறை. மேகா ஆகாஷ் நாயகி. கன்னட படவுலகைச் சேர்ந்த தனஞ்ஜெயா, ப்ருத்வி அம்பர் இருவரும் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்கள். டாமன் அண்ட் டையூ பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
மழை பிடிக்காத மனிதன் படம் விஜய் ஆண்டனியின் சலீம் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகிறது. என்.வி.நிர்மல் குமார் சலீமை இயக்கியிருந்தார். இந்தப் படம் தென்கொரியாவின் பிக் பாங்க் (2007) படத்தை தழுவி எடுக்கப்பட்டது. படத்தின் மையக்கரு, கதாநாயகன் வாழ்க்கை, அவனது குணாம்சம்,
சமூகப் பிரச்சனை என அனைத்தும் தென்கொரிய படத்திலிருந்து எடுத்தாண்டிருப்பார்கள். அப்படத்தின் தொடர்ச்சியாகதான் மழை பிடிக்காத மனிதன் உருவாகிறது.

மழை பிடிக்காத மனிதன்
விஜய் ஆண்டனி நடிப்பில் வெற்றி பெற்ற சசியின் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.