தமிழ்ப்படம் சி.எஸ்.அமுதன், விஜய் ஆண்டனி இணையும் க்ரைம் த்ரில்லர்

தமிழ்ப்படம் சி.எஸ்.அமுதன், விஜய் ஆண்டனி இணையும் க்ரைம் த்ரில்லர்

விஜய் ஆண்டனி மற்றும் படக்குழு

சி.எஸ்.அமுதனும், விஜய் ஆண்டனியும் லயோலாவில் ஒன்றாக படித்தவர்கள்.

  • Share this:
    சி.எஸ்.அமுதன் என்றதும் காமெடிதான் நினைவுக்குவரும். தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 என அவர் இயக்கிய இரண்டும் முழுமையான நகைச்சுவைப் படங்கள். தமிழ்ப் படங்களை, நட்சத்திரங்களை பகடி செய்தவை. அவர் அடுத்து ஒரு க்ரைம் த்ரில்லரை இயக்குகிறார். நாயகன் விஜய் ஆண்டனி. இவ்விரு தகவல்களுக்குப் பின்னால் பல பிளாஷ்பேக்குகள் உள்ளன.

    சி.எஸ்.அமுதனும், விஜய் ஆண்டனியும் லயோலாவில் ஒன்றாக படித்தவர்கள். விஜய் ஆண்டனி விஸ்காம், அமுதன் பிசிக்ஸ். ஒன்பது வருடங்களுக்கு முன் இவர்கள் இணைந்து நாக்க முக்க என்ற நகைச்சுவைப் படத்தை எடுப்பதாக இருந்து அது கைவிடப்பட்டது. இப்போது பழைய நண்பர்கள் முதல்முறையாக இணைந்திருக்கிறார்கள். இந்தப் படம் க்ரைம் த்ரில்லராக தயாராகிறது. குறிப்பாகச் சொன்னால் மர்டர் மிஸ்ட்ரி.

    க்ரைம் த்ரில்லர்தான் அமுதன் பேவரிட் ஜானராம். தனஞ்செயன் மற்றும் பலர் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். விஜய் சேதுபதி படம் என்றால் பிச்சைக்காரன், கொலைகாரன், சைத்தான் என்று எதிர்மறை பெயர்களாகத்தான் இருக்கும். ஆனால், இந்தப் படத்துக்கு நேர்மறையான மென்மையான டைட்டில் வைக்கப் போவதாக அமுதன் கூறியுள்ளார். அப்படியே விஜய் ஆண்டனியையும் நடிக்க வைத்தால் ரசிகர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.
    Published by:Sheik Hanifah
    First published: