ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கும்மி அடிச்சி, கதையை முடிச்சிடுவாங்க... பாத்து சூதானமா இருங்க - விஜய் ஆண்டனியின் திடீர் அட்வைஸ்!

கும்மி அடிச்சி, கதையை முடிச்சிடுவாங்க... பாத்து சூதானமா இருங்க - விஜய் ஆண்டனியின் திடீர் அட்வைஸ்!

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    உங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், நீங்களே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களை அழைத்தால், உங்கள் கதையை முடித்து விடுவார்கள் என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    தமிழ் படம் புகழ் இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் படம், ‘ரத்தம்’. இதில், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    அதிஷா வசனம் எழுதும் இந்தப் படத்துக்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். கண்ணன் இசையமைக்கிறார். இதன் கடைசிக்கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வந்தது. அங்கு ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இதைத் தொடர்ந்து ரத்தம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்றும், விரைவில் படம் வெளியாகும் எனவும் சி.எஸ்.அமுதன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ”உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க. அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க. கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.

    கோபியை திருமணம் செய்த கையோடு ராதிகா செய்த காரியம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த நேரத்தில் அவர் ஏன் இப்படியொரு போட்டார் என குழப்பத்தில் இருக்கிறார்கள் இதைப் பார்த்த ரசிகர்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Vijay Antony