விஜய், சூர்யாவுக்கு பாதுகாவலராக இருந்தவர் மரணம் - நடிகர்கள் இரங்கல்

விஜய், சூர்யா உள்ளிட்டோருக்கு பாதுகாவலராக இருந்தவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 47.

விஜய், சூர்யாவுக்கு பாதுகாவலராக இருந்தவர் மரணம் - நடிகர்கள் இரங்கல்
விஜய் | சூர்யா
  • Share this:
விஜய், சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்களுக்கு பாதுகாவலராக இருந்தவர் தாஸ் சேட்டன் உயிரிழந்தார். நடிகர் நடிகைகள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

திரைபிரபலங்கள் சூட்டிங் மற்றும் பொதுவெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது அவர்களைப் பார்க்க பொதுமக்களும் ரசிகர்களும் அதிக அளவில் ஒன்று கூடுவார்கள்.அப்போது அவர்களை பாதுகாக்க அப்பகுதி போலீசார் காவலுக்கு வந்தாலும், அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசலில் இருந்து திரைபிரபலங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல தனியார் பாதுகாவலர்களை நியமிப்பது வழக்கம். அவ்வாறு விஜய், சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்களுக்கு பாதுகாவலராக இருந்தவர் தாஸ்.

இவர் மலையாள உலகின் முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, பிருத்விராஜ் உள்ளிட்டோருக்கும் நடிகைகள் சிலருக்கும் பாதுகாவலராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட தாஸ் சேட்டனுக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 12-ம் தேதி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கீர்த்தி சுரேஷ், பிருத்விராஜ் உள்ளிட்டோர் அவர்களது ட்விட்டர் பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 

மேலும் படிக்க: சிம்மாசனத்தில் விஜய்... பர்த்டே காமன் டிபி வெளியிட்டு கொண்டாடும் ரசிகர்கள்
First published: June 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading