Thalapathy 65: ஜார்ஜியாவில் விஜய்யுடன் டூயட் பாடும் பூஜா ஹெக்டே!

Thalapathy 65: ஜார்ஜியாவில் விஜய்யுடன் டூயட் பாடும் பூஜா ஹெக்டே!

பூஜா ஹெக்டே - விஜய்

விஜய்யின் 65 வது படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது. ஒரு சண்டைக் காட்சி உள்பட பல முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், டூயட் ஒன்றையும் படமாக்குகின்றனர்.

  • Share this:
    விஜய்யின் 65 வது படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது. ஒரு சண்டைக் காட்சி உள்பட பல முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், டூயட் ஒன்றையும் படமாக்குகின்றனர்.

    'மாஸ்டர்' விஜய்யின் 64-வது படம். இதையடுத்து கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்த மாத ஆரம்பத்தில் ஜார்ஜியாவில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. படத்தின் 30 சதவீத காட்சிகள் இங்கு படமாக்கப்பட உள்ளன.

    விஜய்யும், படக்குழுவும் ஜார்ஜியா கிளம்பியதற்கு ஒரு நாள் கழித்தே படத்தின் நாயகி பூஜா ஹெக்டே ஜார்ஜியா சென்றார். அவரும், விஜய்யும் இடம்பெறும் டூயட் ஒன்றை அங்கு படமாக்குகின்றனர். முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே சுமார் 9 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

    விரைவாக படத்தை முடித்து, இந்த வருடமே படத்தை திரைக்கு கொண்டுவர சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது. ஆக்‌ஷன், சென்டிமெண்ட், காதல், காமெடி அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக இதனை நெல்சன் எடுத்து வருகிறார்.




    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: