Tamil Cinema: பிற மொழி தயாரிப்பாளர் படங்களில் ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்!

தனுஷ் - விஜய் - அஜித்

தமிழ் மொழியில் பிற மொழி நடிகர்களும், இயக்குனர்களும் பலமுறை கோலோச்சி உள்ள நிலையில் தற்போது பிறமொழி தயாரிப்பாளர்களின் ஆதிக்கம் தமிழ் மொழியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

  • Share this:
    தமிழின் முன்னணி நடிகர்கள் பிறமொழி தயாரிப்பாளர்கள் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவது தமிழ் தயாரிப்பாளர்கள் பலரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

    சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதை கடந்து மொழி, கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக திகழ்கிறது. 1950-ஆம் ஆண்டு வாழ்ந்த மக்களின் உணவுப் பழக்கம் ஆடை அணியும் முறை எவ்விதமாக இருந்தது என்பதை தெரிந்து கொள்ள அந்த காலகட்டத்தில் வெளி வந்த திரைப்படங்களைப் பார்த்தால் அவர்களின் நாகரீகம் பொருளாதார நிலை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முடியும். அதேபோல இன்று வெளிவரும் திரைப்படங்கள் அடுத்து 50 ஆண்டுகள் கழித்து இருக்கும் தலைமுறையினர் தற்போதைய மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளும் ஆவணமாக அது மாறுகிறது. இப்படிப்பட்ட சினிமாவில் மொழிக்கலப்பு பிறமொழியினர் ஆதிக்கம் என்பது எல்லா மொழி சினிமாவிலும் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.

    தமிழ் மொழியில் பிற மொழி நடிகர்களும், இயக்குனர்களும் பலமுறை கோலோச்சி உள்ள நிலையில் தற்போது பிறமொழி தயாரிப்பாளர்களின் ஆதிக்கம் தமிழ் மொழியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தெலுங்கு முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில் அடுத்த ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தமிழின் மற்றொரு முன்னணி நடிகரான அஜித்தோ அடுத்தடுத்து பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதேபோல நடிகர் தனுஷும் தெலுங்கு இயக்குனர் கம்முலா இயக்கத்தில் நடிக்கும் திரைப்படத்தையும் அடுத்த ஒரு திரைப்படத்தையும் தெலுங்கு சினிமா தயாரிப்பு நிறுவனத்திற்கு நடிக்க உள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இவ்வாறு பிற மொழி தயாரிப்பாளர்களுக்கு தமிழின் முன்னணி நடிகர்கள் திரைப்படங்கள் நடிக்கும்போது, அவர்களை வளர்த்து விட்ட தமிழ் பட தயாரிப்பாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இது குறித்து பேசினால் மீண்டும் தங்களுக்கு முன்னணி நடிகர்களின் தேதி கிடைக்காது என்பதால் இது குறித்து பேசவும் அஞ்சுகின்றனர்.

    நடிகர் விஜய்யை தமிழ் திரையுலகில் ஆளாக்கிய முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் தேதி கேட்டு காத்துக் கொண்டிருக்க விஜய் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பது ஏன் என விளக்குகிறார் திரைப்பட விமர்சகர் பிஸ்மி

    (ஜெ.பிஸ்மி, விமர்சகர்)

    தமிழ் தயாரிப்பாளர்களை காட்டிலும் கூடுதல் சம்பளம் வழங்க பிறமொழி தயாரிப்பாளர்கள் முன்வருவதால் பிறமொழி தயாரிப்பாளர்களின் திரைப்படங்களில் நடிக்க நடிகர்கள் ஆர்வம் காட்டுவதால் தமிழ் தயாரிப்பாளர்கள் வெகுவாக கஷ்டப்படும் சூழலை முன்னணி நடிகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதும், இவர்கள் முன்னணி நடிகர்களாக மாற துணைநின்ற தயாரிப்பாளர்கள் லாபம் அடையும் அளவிற்கு சில திரைப்படங்களில் நடித்துக் கொடுக்க வேண்டும் என்பதே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் கோரிக்கையாக உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: