ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vijay 67: விஜய் ரசிகர்களுக்கு மிகப் பெரிய சர்ப்ரைஸ் தரப்போகும் லோகேஷ்!

Vijay 67: விஜய் ரசிகர்களுக்கு மிகப் பெரிய சர்ப்ரைஸ் தரப்போகும் லோகேஷ்!

லோகேஷ் - விஜய்

லோகேஷ் - விஜய்

விஜய் நடிக்கும் 67வது திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் சினிமேட்டிக் யுனிவேர்ஸ் (LCU) இடம்பெறும் என தகவல். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் நடிக்க உள்ள 67-வது திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜின் முந்தைய திரைப்படங்களுக்கான தொடர்பு இருக்கும் (LCU- Lokesh Cinematic Universe) என தகவல் வெளியாகியுள்ளது. 

வாரிசு படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும்  படத்தில் விஜய் நடிக்க உள்ளார். அது அவரின் 67-வது திரைப்படமாக உருவாக உள்ளது.  அந்த திரைப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். அதேபோல் விஜயின் மேலாளர் ஜெகதீஷ் அந்த திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக இணைகிறார். விஜய் 67 திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

எருமை சாணி புகழ் விஜய்க்கு கல்யாணம்.. பொண்ணு இவங்க தான்!

குறிப்பாக கதை விவாத பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக விஜய் 67 திரைப்படத்தை நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் மாதத்தில் தொடங்க பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் விரைவில் வெளியிட உள்ளனர்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் இந்த திரைப்படத்திலும் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. அத்துடன் மும்பை சார்ந்த கேங்ஸ்டர் வகையில் இந்த திரைப்படத்தை அவர் எடுக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் ஹாலிவுட் வெளியான ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக் உரிமையையும் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வாங்கியுள்ளார். எனவே அந்த திரைப்படத்தின் சாயலும், விஜய் 67 இருக்கலாம் என கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் படங்கள் ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் திரைப்படத்தின் சாயலில் இருப்பதாக ஏற்கனவே விமர்சிக்கப்பட்டன இந்த நிலையில் அதன் உரிமையை தற்போது அதிகாரப்பூர்வமாக அவர் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Sreeja
First published:

Tags: Actor Vijay, Kollywood, Lokesh Kanagaraj, Tamil Cinema