இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள விஜய் 67 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். அவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் வெளியாகி உள்ளது. இதை அடுத்து மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது.
படத்தின் அப்டேட் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. அதற்கு காரணம் கடந்த ஆண்டு லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘விக்ரம்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வருகிறது.
இந்தப் படத்திற்காக History of Violence படத்தின் உரிமையை முறையாக கைப்பற்றி அதில் சில மாற்றங்களை செய்து திரைக்கதை எழுத்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ். மேலும் தன்னுடைய முந்தைய படங்களின் தொடர்பான Lokesh Cinematic Universe கனெக்ஷனையும் தொடர்புப் படுத்தியுள்ளார்.
‘விஜய் 67’ படத்தின் அதிகாரபூர்வ அப்டேட்டை நேற்று படக்குழு வெளியிட்டது. படத்தில் இடம்பெறும் நடிகர்கள் உள்ளிட்ட விபரங்களை படக்குழு தற்போது வெளியிட்டு வருகிறது
இந்தப் படத்திற்கு அனிருத் - இசை, மனோஜ் பரமஹம்சா - ஒளிப்பதிவு என அப்டேட்டில் இருந்த தகவல்கள் ஏற்கனவே ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். நண்பன், பீஸ்ட் படங்களுக்கு பிறகு 3வது முறையாக மனோஜ் பரமஹம்சா இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளை அன்பறிவு மாஸ்டர் வடிவமைக்கவுள்ளார். படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜும், கலை இயக்குநராக சதிஷ் குமாரும் பணியாற்றவுள்ளனர். அதே போல லோகேஷ் கனகராஜுடன் ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி இணைந்து இந்தப் படத்துக்கு வசனம் எழுதுகின்றனர்.
We feel esteemed to welcome @duttsanjay sir to Tamil Cinema and we are happy to announce that he is a part of #Thalapathy67 ❤️#Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/EcCtLMBgJj
— Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் கேஜிஎப் 2 வில்லனும் பிரபல பாலிவுட் நடிகருமான சஞ்சய் தத் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay, Lokesh Kanagaraj