Home /News /entertainment /

Vijay 67 : ஆயுத பூஜைக்கு வெளிவரும் விஜய் படம்!

Vijay 67 : ஆயுத பூஜைக்கு வெளிவரும் விஜய் படம்!

விஜய் 67

விஜய் 67

vijay 67 release date: விஜய்யுடன் நடிக்க நடிகர் அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
விஜய் நடிக்கும் 67 வது படத்தை அடுத்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகைக்கு வெளியிட படக்க்குழு திட்டமிட்டுள்ளனர்

நடிகர் விஜய் தற்போது 'வாரிசு' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகின்றன. சென்னை - ஹைதராபாத் ஆகிய இடங்களில் வாரிசு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதை அக்டோபர் மாதத்தில் முடிக்க இயக்குநர் வம்சி திட்டமிட்டு இருக்கிறார். இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  தன்னுடைய 67வது படத்தில் விஜய் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

செல்ல மகளுடன் நடிகர் சதீஷ்.. லைக்ஸ் அள்ளும் தந்தை மகளின் அட்ராசிட்டி!

குறிப்பாக, நடிகர்களை இறுதி செய்யும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.  அதில் முதற் கட்டமாக மலையாள நடிகர் பிருத்விராஜ், பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் மற்றும் நடிகை திரிஷா ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.  இதைத்தொடர்ந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க தமிழ் நடிகர் அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.  ஆனால் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

உதயநிதி நடிக்கும் படத்தை இயக்கும் பிரசாந்த் முருகேசன்

நடிகர்கள் தேர்வு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் 67 திரைப்படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மூன்றாவது வாரம் அல்லது டிசம்பர் 1-ம் தேதி தொடங்க திட்டமிட்டு இருக்கின்றனர். அத்துடன் அடுத்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகைக்கு படத்தை வெளியிடவும் திட்டமிட்டு இருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Actor Vijay, Kollywood, Lokesh Kanagaraj, Tamil Cinema

அடுத்த செய்தி