இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக தனி விமானம் மூலம் இன்று காஷ்மீர் சென்றுள்ளது படக்குழு.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்றி வரும் ‘விஜய் 67’ படத்தின் அதிகாரபூர்வ அப்டேட்டை நேற்று படக்குழு வெளியிட்டது. படத்தில் இடம்பெறும் நடிகர்கள் உள்ளிட்ட விபரங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தெரிவித்துள்ளது.
இந்தப் படத்திற்கு அனிருத் - இசை, மனோஜ் பரமஹம்சா - ஒளிப்பதிவு என அப்டேட்டில் இருந்த தகவல்கள் ஏற்கனவே ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். நண்பன், பீஸ்ட் படங்களுக்கு பிறகு 3வது முறையாக மனோஜ் பரமஹம்சா இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளை அன்பறிவு மாஸ்டர் வடிவமைக்கவுள்ளார். படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜும், கலை இயக்குநராக சதிஷ் குமாரும் பணியாற்றவுள்ளனர். அதே போல லோகேஷ் கனகராஜுடன் ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி இணைந்து இந்தப் படத்துக்கு வசனம் எழுதுகின்றனர்.
மேலும் இந்தப் படத்துக்கு நடன இயக்குநராக தினேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு தினேஷ் தான் நடனம் அமைத்திருந்தார்.
On board in #Thalapathy67 as EP and also on board to Kashmir with one & only #Thalapathy @actorvijay sir,@Dir_Lokesh , #LalitSir @Jagadishbliss & the entire crew for the next schedule 😍🔥 pic.twitter.com/gEFbET0Uan
— Ramkumar (@RamVJ2412) January 31, 2023
இந்நிலையில் இன்று விஜய் 67 படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றுள்ளனர். இந்தப் பயணத்தில் நடிகர் விஜய் உடன் இயக்குநர் லோகேஷ் கனகராக், தயாரிப்பாளர் லலித் என படக்குழுவினர் அனைவரும் சென்றுள்ளதாக தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also read... Exclusive: ரசிகர்களை கொண்டாட வைக்கும் பஞ்ச் டயலாக்... விஜய் 67 ப்ரமோவில் என்னென்ன இருக்கின்றன?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay, Lokesh Kanagaraj