விஜய் நடிப்பில் உருவாகும் 66வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரின் 66வது படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்த படக்குழுவினர், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தினர். இதை தொடர்ந்து மீண்டும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது.
வெளியானது ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது திரைப்படத்தின் பெயர்!
அதில் சில வசன காட்சிகளும் ஒரு பாடல் காட்சியையும் படக்குழுவினர் படமாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சண்டை கலைஞர்களுடன் விஜய் மோதும் சண்டைக் காட்சியை சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் படமாக்கி வருகின்றனர். அது தவிர விஜய், குஷ்பு உள்ளிட்டோர் பங்குபெறும் சில காட்சிகளையும் அங்கு படமாக்குகின்றனர். சென்னை படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த மாதம் மீண்டும் ஐதராபாத்தில் நான்காம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

படபிடிப்பு காட்சி
ரஜினி பட நடிகைக்கு இப்படியொரு நிலைமையா! சோப்பு விற்பதாக அவரே சொன்ன தகவல்
இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ் பிரபு, ஷாம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அதைப்போல் முதன்முறையாக இந்த திரைப்படம் மூலம் இசையமைப்பாளர் எஸ். தமன் விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார். விஜய்யின் 66வது திரைப்படத்தின் தலைப்பு வரும் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்க உள்ளனர். அதற்கான முதல் பார்வை மற்றும் தலைப்பு அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.