விஜய்க்கு சொன்ன கதையில் சிம்பு? தடம் மாறுகிறதா ‘தளபதி 65’ பிளான்!

விஜய்க்கு சொன்ன கதையில் சிம்பு? தடம் மாறுகிறதா ‘தளபதி 65’ பிளான்!
சிம்பு - விஜய்
  • Share this:
மாஸ்டர் படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் விஜய். இத்திரைப்படம் விஜய்யின் 64-வது படமாக உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்தை அடுத்து விஜய்க்கு கதை சொல்லிய இயக்குநர்கள் பட்டியலில் முதலில் இயக்குநர் பேரரசின் பெயர். அதைத்தொடர்ந்து பைரவா பட இயக்குநர் பரதன், பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜா, சுதா கொங்கரா உள்ளிட்டோர் இடம்பெற்றனர். இதில் சுதா கொங்கரா கூறிய கதையின் ஒன்லைன் விஜய்க்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் தகவல் வெளியானது. எனவே விஜய் - சுதா கொங்கரா கூட்டணி அடுத்த படத்தில் இணைய உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது.


அடுத்தடுத்து நடந்த சந்திப்புகளில் சுதா கொங்கராவிடம் முழுமையான திருப்தி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கதையை முழுவதும் முடித்து படப்பிடிப்பு தொடங்க நவம்பர் மாதம் வரை ஆகும் என்பதால் விஜய் சுதா - கொங்கரா கூட்டணி உருவாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அதேகதையை சிம்புவை சந்தித்துக் கூறிய சுதா கொங்கரா, மாநாடு படத்துக்குப் பிறகு புதிய திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதுஒருபுறமிருக்க இயக்குநர் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் சந்திப்பு நடைபெற்றதாகவும், எனவே விஜய்யின் 65-வது படமாக துப்பாக்கி 2 இருக்கும் என்றும் கூறப்படுகிறது.மேலும் படிக்க: மாஸ்டர் அவதாரமெடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்... கல் தோசை கேட்ட பிரபல நடிகை!
First published: March 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading