தளபதி 63 அப்டேட்... புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

Web Desk | news18
Updated: December 6, 2018, 10:22 AM IST
தளபதி 63 அப்டேட்... புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்
நடிகர் விஜய்
Web Desk | news18
Updated: December 6, 2018, 10:22 AM IST
விஜயின் அடுத்த படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், பட ஷுட்டிங்கை நடத்த இடம் தேர்வு செய்யும் பணியில் பிஸியாக ஈடுபட்டுள்ளார்.

விஜயின் அடுத்த பட இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, கேமராமேன் விஷ்னு ஆகியோர் படப்பிடிப்பு பணிகளுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளனர்

சார்கார் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் இயக்குநர் அட்லியுடன் மூன்றாவது முறையாக தளபதி 63 படத்திற்காக இணைந்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் பூஜைகள் நடைபெற்ற நிலையில் தற்போது படப்பிடிப்பிற்கான இடங்கள் தேர்வு செய்யும் பணியில் இயக்குநர் அட்லி தீவிரமாக இறங்கியுள்ளார்.

அதற்காக படத்தின் இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, கேமராமேன் விஷ்னு ஆகியோர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றுள்ளனர். அவர்கள் எடுத்த புகைப்படத்தை தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Loading...
 
View this post on Instagram
 

From Kollywood to Hollywood #Thalpathy63 @atlee47 @gkvishnu with my #colorKanadi 😎😎


A post shared by Archana Kalpathi (@archanakalpathi) on


இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also See.. 

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...