நயன்தாராவோட எப்பதாங்க கல்யாணம் - இன்ஸ்டாகிராமில் போட்டுடைத்த விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா உலகின் பரபரப்பான காதல் ஜோடியாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் வலம் வருகிறார்கள்.

 • Share this:
  நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்பது குறித்தி இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவன் மனம் திறந்துள்ளார்.

  தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் கேரளத்துக்கு அம்மணி நயன்தாரா. விரல் நடிகருடன் ஆரம்பத்தில் கிசுகிசுக்கப்பட்டு நடன இயக்குநருடன் பஞ்சாயத்தை முடித்துக்கொண்டு கொஞ்ச காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். மிரட்டலான் ரீஎண்ட்ரி கொடுத்த நயனுக்கு கோடிகளில் சம்பளம் கொட்டுகிறது. ‘நானும் ரெளடி தான்’ படம் பண்ணும் போது இளம் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார்.

  தமிழ் சினிமா உலகின் பரபரப்பான காதல் ஜோடியாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் வலம் வருகிறார்கள். இந்த காதல் ஜோடிகளின் புகைப்படம் இணையத்தில் அவ்வப்போது வைரலாகும். சினிமா, வேர்ல்ட் டூர் என ஜாலியாக சுற்றி வருகிறார்கள். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்பதால் நயன் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்ற முடிவில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இயக்குநர் விக்னேஷ் சிவன் நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் சண்டே கேள்வி நேரம்.. என்ற கேப்ஷனில் சாட் செய்தார். அப்போது ரசிகர் ஒருவர், எப்பத்தான் நயன்தாராவ கல்யாணம் பண்ணிக்க போறீங்க. ஆவலுடன் காத்திருக்கேன்” எனக் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், ரொம்ப செலவாகும் ப்ரோ.. கல்யாணம் மற்ற விஷயங்களுக்கு. அதனால் கல்யாணத்துக்காக காசு சேர்த்துட்டு இருக்கேன். கொரோனா முடியட்டும்னு காத்திருக்கேன்” என்றார். கொரோனா முடிந்ததும் நயன் - விக்னேஷ் சிவனுக்கு டும் டும் டும்மான்னு.. நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: