இஸ்லாமியராக மாறிய விக்னேஷ் சிவன்?

Web Desk | news18
Updated: April 13, 2019, 8:12 PM IST
இஸ்லாமியராக மாறிய விக்னேஷ் சிவன்?
விக்னேஷ் சிவன்
Web Desk | news18
Updated: April 13, 2019, 8:12 PM IST
நடிகர் ரஜினிகாந்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் சந்தித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

பேட்ட படத்தை அடுத்து இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

கடந்த 9-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து மும்பையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில் விக்னேஷ் சிவன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து அவர் இஸ்லாமிய புனித தலமான அஜ்மீர் தர்ஹாவுக்கும் சென்றுள்ளார். அதற்கான புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ரஜினிகாந்தை சந்தித்தது அவரது அடுத்த படத்தை இயக்குவதற்காக என்றும், தர்பார் படத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்துக்கு பாடல் எழுதுகிறார் என்றும் தகவல்கள் வெளியாகின. 
View this post on Instagram
 

Blessings from #ajmeer 😇😇😇😇 #superPowerful #superpositive #positivevibes #FeelIt to #believe it


A post shared by Vignesh Shivn (@wikkiofficial) on


ஆனால் விக்னேஷ் சிவன், தான் இயக்க இருக்கும் சிவகார்த்திகேயன் பட கதையை மும்பையில் எழுதி வருவதால் இந்த சந்திப்பு தற்செயலாக நடந்தது என்றும், அவரது அஜ்மீர் தர்ஹா விசிட்டும் தற்செயலாக நடந்தது தான் என்றும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜ்மீர் தர்ஹாவுக்குச் சென்ற விக்னேஷ் சிவன், தலையில் தொப்பி அணிந்து இஸ்லாமிய முறைப்படி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. சிலர், அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டாரா என்றும் கேட்டு வருகின்றனர்.

தேர்தலில் வாக்களிக்க முடியாத இந்திய திரைத்துறை பிரபலங்கள் - காரணம் என்ன தெரியுமா?


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...