ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாரை கரம் பிடிக்கும் விக்னேஷ் சிவன்… யார் இவர்?

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாரை கரம் பிடிக்கும் விக்னேஷ் சிவன்… யார் இவர்?

நயன்தாரா விக்னேஷ் சிவன்

நயன்தாரா விக்னேஷ் சிவன்

Vignesh Shivan : நானும் ரவுடிதான் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான சைமா விருதை விக்னேஷ் பெற்றார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார், லட்சக்கணக்கானோரின் ட்ரீம் கேர்ளாக இருக்கும் நயன்தாராவை நாளை கரம் பிடிக்கிறார் விக்னேஷ் சிவன். யார் இவர்… எங்கிருந்து இந்த உயரத்தை தொட்டார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

விக்னேஷ் சிவன் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து சினிமாவில் ஆக்டிவாக உள்ளார். 1985 செப்டம்பர் 18-ம்தேதி பிறந்தவர் விக்னேஷ் சிவன்.

2007-ல் சிவி என்ற படம் வந்தது. இதில் ஹீரோ கிருஷ்ணாவுக்கு நண்பராக விக்னேஷ் நடித்திருப்பார்.

2012-ல் சிம்பு, வரலட்சுமி சரத் குமார் நடித்த போடா போடி படத்தை இயக்கினார் விக்னேஷ். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருப்பார். போடா போடி திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது.

முதல் படம் இயக்கிய 3 ஆண்டுகளுக்கு பின்னர் நானும் ரவுடிதான் படம் 2015-ல் வெளிவந்தது. இந்த படம் உருவான வேளையில்தான் விக்னேஷுக்கும், நயன்தாராவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக அடுத்த லெவலுக்கு சென்றது.

நானும் ரவுடிதான் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான சைமா விருதை விக்னேஷ் பெற்றார்.

2018-ல் தானா சேர்ந்த கூட்டம் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்தது. இந்த படத்தை மெகாஹிட் என்றும் சொல்ல முடியாது, ஃப்ளாப்பான படம் என்றும் சொல்ல முடியாத அளவுக்கு ஓரளவு வரவேற்பை பெற்றது.

2020-ல் பாவ கதைகள் என்ற ஆந்தாலஜியில், ‘லவ் பண்ணா உட்றனும்’ என்ற தலைப்பில் விக்னேஷின் படைப்பு இடம்பெற்றது. இப்படியொரு படைப்பு வந்தது அதிகமானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தற்போது நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம், விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் வெற்றி பெற்றுள்ளது.

மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரூ. 66 கோடியை வசூலித்துள்ளது. ஒரு சில ஹிட் படங்களை விக்னேஷ் சிவன் கொடுத்திருந்தாலும், அவர் அதிகமாக பேசப்பட்டதற்கு காரணம் நயன்தாரா முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

First published:

Tags: Nayanthara, Vignesh Shivan