நடிகர் அஜித் குமாரின் ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியதிலிருந்து அவரின் அடுத்த படம் குறித்த பல்வேறு தகவல் பரவிவருகின்றன. அதற்கேற்ப அவரது புதிய படத்தில் அபிஷேக் பச்சன் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பான் இந்தியன் படமாக உருவாகும் இந்தப் படத்துக்காக தற்போது விக்னேஷ் சிவன் மும்பையில் இருக்கிறார். சமீபத்தில் மும்பை ஏர்போர்ட்டில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா அவர்களது குழந்தைகளுடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ’என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி.
View this post on Instagram
வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளுக்கும் ஒரு நன்மை இருக்கிறது. பாராட்டும் வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது.
எனது விக்கி 6 படத்துக்காக இதயத்திலிருந்து தயாராகிறேன். இந்த கடினமான காலகட்டத்தில் என்னுடன் தன்மையாக நடந்துகொண்ட மக்களுக்கும் கடவுளுக்கும் நன்றி. உங்களுடைய ஆதரவும் என் மீதான நம்பிக்கையும் என்னை அடையாளம் காண மட்டுமல்ல, நிச்சயமற்ற இந்த சூழ்நிலையில் வாழவும் உதவியது. இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வருங்காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
எனக்கு மூச்சு விட சிறிது நேரம் கொடுத்து என் குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிட வாய்ப்பளித்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.