ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Nayanthara: தன்னிறைவு அடைந்து விட்டேன்... மனைவி நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனின் ரொமாண்டிக் வாழ்த்து!

Nayanthara: தன்னிறைவு அடைந்து விட்டேன்... மனைவி நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனின் ரொமாண்டிக் வாழ்த்து!

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

இப்போது நான் தன்னிறைவு அடைந்து விட்டதாக உணர்கிறேன். வாழ்க்கை மிகவும் அழகாகவும், திருப்தியாகவும் நன்றியுடனும் இருப்பதாக உணர்கிறேன்!

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மனைவி நயன்தாராவுக்கு ரொமாண்டிக்காக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

  நடிகை நயன்தாரா இன்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து கணவர் விக்னேஷ் சிவன் அவருக்கு இன்ஸ்டகிராமில், ரொமாண்டிக்காக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

  அதில், “நயன், இது உன்னுடனான ஒன்பதாவது பிறந்த நாள். எனக்கு உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு பிறந்த நாளும் மிகவும் ஸ்பெஷலானது. நிறைய நினைவுகளைக் கொண்டது, வித்தியாசமானது.

  ஆனால், இப்போது கணவனும் மனைவியுமாக. அழகான ஆசீர்வதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் தந்தை மற்றும் தாயாக ஒரு வாழ்க்கையை நாம் தொடங்கியிருப்பதால், இது எல்லாவற்றையும் விட சிறந்த, ரொம்பவும் ஸ்பெஷலான பிறந்த நாள் நமக்கு.

  நான் எப்போதும் உன்னை ஒரு சக்திவாய்ந்த நபராகத்தான் பார்த்தேன். எதையும் நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்பவர். இத்தனை வருடமும் ஒரு வித்தியாசமான நபராகத்தான் உன்னைப் பார்த்தேன். வாழ்க்கையில் மட்டுமல்லாமல் எல்லாவற்றிலும் உன் நேர்மையால் எப்போதும் ஈர்க்கப்பட்டேன். மனநிறைவுடன் இருக்கிறாய்.
   
  View this post on Instagram

   

  A post shared by Vignesh Shivan (@wikkiofficial)  ஆனால் இன்று!

  நான் உன்னை ஒரு தாயாக பார்க்கும் போது, இதுவே உன்னுடைய மகிழ்ச்சியான, முழுமையான தோற்றம் என்று உணர்கிறேன். இப்போது நீ முழுமை அடைந்துவிட்டாய். இப்போது நீ மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறாய். இன்னும் கொஞ்சம் அழகாக இருக்கிறாய். குழந்தைகள் உன்னை முத்தமிடுவதால் இப்போதெல்லாம் நீ மேக்கப் போடுவதில்லை. இத்தனை வருடங்களில் இவ்வளவு அழகாக உன்னை நான் பார்த்ததில்லை.

  தமிழ் சினிமாவில் நயன்தாரா மட்டும் ஏன் ஸ்பெஷல்?

  உன் முகத்தில் இப்போது இருக்கும் என்றும் மாறாத இந்தப் புன்னகையும், மகிழ்ச்சியும் இப்போதிலிருந்து உன்னுடன் நிரந்திரமாக இருந்துவிட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

  இப்போது நான் தன்னிறைவு அடைந்து விட்டதாக உணர்கிறேன். வாழ்க்கை மிகவும் அழகாகவும், திருப்தியாகவும் நன்றியுடனும் இருப்பதாக உணர்கிறேன்! நம் குழந்தைகளுடன் நமது பிறந்தநாளெல்லாம் இது போல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுகிறேன்!

  என் உயிர் மற்றும் உலகம் என எல்லாம் என்றுமே நீ தான், லவ் யூ என் பொண்டாட்டி, தங்கமே... பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை லேடி & சூப்பர் ஸ்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Nayanthara, Vignesh Shivan