நடிகர் அஜித்குமாரின் ஏகே 62 படம் குறித்து நாளுக்குநாள் மாறுபட்ட தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. விக்னேஷ் சிவன் முழுக் கதையையும் தயார் செய்யாதது தயாரிப்பு தரப்புக்கு அதிருப்தி ஏற்படுத்தியதாகவும், இதன் காரணமாகவே அவரை மாற்ற தயாரிப்பு நிறுவனம் முடிவுசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. இந்தப் படத்தையும் லைக்கா நிறுவனமே தயாரிக்கவிருந்தது. ஆனால் இந்தப் படமும் மேற்சொன்ன காரணத்துக்காகவே கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஏகே 62 படத்துக்காக விஷ்ணுவர்தன், பிரஷாந்த் நீல் போன்றோர் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
This is for you man @VigneshShivN 👑🔥 u know this❤️cause this is u💯
Remember It rains................?#WIKI #AK62 #HOPE pic.twitter.com/1BINHQ8Jha
— 👑RAJESH👔🏋️ (@Rajeshhandle) January 31, 2023
சமீபத்தில் வெளியான தகவல்படி இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மகிழ் திருமேனி ஏற்கனவே நடிகர் விஜய்யை சந்தித்து கதை சொல்லியிருந்தார். அந்தக் கதையைத் தான் தற்போது அஜித்துக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக ரசிகர் ஒருவர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதியின் அம்மா கதாப்பாத்திரம் அவருக்கு ஆறுதல் சொல்லும் ஒரு காட்சியைப் பகிர்ந்து, இது உங்களுக்காக விக்னேஷ் சிவன், ஏனென்றால் இது நீங்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவை விக்னேஷ் சிவன் லைக் செய்துள்ளார். இதுவரை ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், விக்னேஷ் சிவன் ரசிகரின் ஆறுதல் வீடியோவை லைக் செய்துள்ளது அந்தத் தகவலை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.