• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'என் வயிறு எரியுது...’ நெல்சன் திலீப் குமார் படத்துக்கு பிரபல இயக்குநர் கமெண்ட்

'என் வயிறு எரியுது...’ நெல்சன் திலீப் குமார் படத்துக்கு பிரபல இயக்குநர் கமெண்ட்

தோனி மற்றும் விஜய்யுடன் நெல்சன் திலீப் குமார்

தோனி மற்றும் விஜய்யுடன் நெல்சன் திலீப் குமார்

கிரிக்கெட்டின் தல என்று அழைக்கப்படும் தோனியும், தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய்யும் நேற்று சந்தித்துக் கொண்டது சமூக வலைதளங்களில் வைரலானது.

  • Share this:
    இயக்குநர் நெல்சன் திலீப் குமாரை பார்க்கும் போது, தனது வயிறு எரிவதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

    கிரிக்கெட்டின் தல என்று அழைக்கப்படும் தோனியும், தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய்யும் நேற்று சந்தித்துக் கொண்டது சமூக வலைதளங்களில் வைரலானது. விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். விஜய்யின் சர்கார் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    இந்நிலையில் விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் ஷூட்டிங்கும், தோனி நடிக்கும் விளம்பர பட ஷூட்டிங்கும் நேற்று சென்னையில் அருகருகே நடந்தது. இதில் சந்தித்துக் கொண்ட விஜய், தோனியின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.



    அப்போது விஜய் மற்றும் தோனியுடன் எடுத்துக் கொண்ட படத்தை பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் திலீப் குமாரும் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த அவரது நண்பரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன், ”ஒரு வார்த்த சொல்லிருக்கலாம்... 274 டிகிரி செல்சியஸ் டிகிரிக்கு வயிறு எரிகிறது. ரா ஃபைலை அனுப்பு நெல்சன். நான் ஃபோட்டோ ஷாப்பாவது பண்ணிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: