நயன்தாராவுக்காக புது அவதாரம் எடுக்கும் விக்னேஷ் சிவன்

சிவகார்த்திகேயனுடன் மிஸ்டர்.லோக்கல் படத்தை நடித்து முடித்துவிட்ட நயன்தாரா, விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார்.

news18
Updated: February 13, 2019, 3:54 PM IST
நயன்தாராவுக்காக புது அவதாரம் எடுக்கும் விக்னேஷ் சிவன்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்
news18
Updated: February 13, 2019, 3:54 PM IST
நயன்தாரா நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முடித்துவிட்ட நயன்தாரா, கடந்த சிலவருடங்களாக வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி அவர் தேர்வுசெய்த அறம், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்திருந்தன.

Actress Nayanthara - Airaa Movie

சிவகார்த்திகேயனுடன் மிஸ்டர்.லோக்கல் படத்தை நடித்து முடித்துவிட்ட நயன்தாரா, விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார். அதேவேளையில் லட்சுமி குறும்பட இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ஐரா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்தநிலையில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை அவள் பட இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்குவார் என்றும் கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் 100 படங்களை நடித்த பிறகு தான் திருமணம் செய்துகொள்ளப் போவதாக நயன்தாரா முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

VIDEO: ஓவியாவின் 90 எம்.எல் படத்துக்கு கிளம்பும் எதிர்ப்பு

First published: February 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...