Vignesh Shivan-Nayanthara: நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண நிச்சயதார்த்தம்? வைரலாகும் படம்!

Vignesh Shivan-Nayanthara: நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண நிச்சயதார்த்தம்? வைரலாகும் படம்!

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இயக்குனர் விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருப்பவர். தனது காதலி நயன்தாராவுடன் தான் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களையும் பின்தொடர்பவர்களையும் ஆக்டிவாக வைத்திருக்கிறார். தற்போது நயன்தாரா தனது கையில் அணிந்திருக்கும் மோதிரம் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.



     




    View this post on Instagram





     

    A post shared by Vignesh Shivan (@wikkiofficial)






    அந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்குமோ என யூகங்கள் கிளம்பியிருக்கின்றன. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

    விக்னேஷ் சிவன் வெளியிட்ட அந்த ரொமாண்டிக் புகைப்படத்தில் விக்னேஷ் சிவனின் மார்பின் மீது நயன்தாராவின் கைகளையும், அவரது மோதிரத்தையும் வெளிப்படுத்துகிறது. "விரலோடு உயிர் கூட கோர்த்து" என்று அந்த புகைப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளார் விக்கி. இவர்கள் நிச்சயதார்த்தம் செய்தார்களா என தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ரசிகர்கள் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: