முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / முதன்முறையாக இரட்டை குழந்தைகளுடன் வெளியே வந்த விக்கி - நயன்தாரா: வைரலாகும் வீடியோ

முதன்முறையாக இரட்டை குழந்தைகளுடன் வெளியே வந்த விக்கி - நயன்தாரா: வைரலாகும் வீடியோ

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

மும்பை விமான நிலையத்திற்குள் விக்னேஷ் சிவன், நயன்தாரா தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியதிலிருந்து விஜய் சேதுபதி - அபிஷேக் பச்சன் ஆகியோர் நடிப்பில் ஒரு பான் இந்தியன் படத்தை அவர் இயக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. கேங்ஸ்டர் படமாக இது உருவாகவிருக்கிறதாம். பாலிவுட்டின் பிரபல எழுத்தாளர் ஒருவர் இந்தப் படத்துக்கு கதை எழுதவிருப்பதாகவும் அதற்காக தற்போது விக்னேஷ் சிவன் மும்பையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து மும்பையில் விக்னேஷ் சிவன் இருக்கும் படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஏகே 62 கதை தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கு பிடிக்கவில்லை என கூறப்பட்ட நிலையில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் விக்னேஷ் சிவன் இருக்கிறார். விரைவில் இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

இந்த நிலையில் மும்பை விமான நிலையத்திற்குள் விக்னேஷ் சிவன், நயன்தாரா தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.  இருவரும் தங்கள் குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த வருடம் அக்டோபரில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாக சர்ச்சை உருவானது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சுகாதாரத்துறை முறையான நடைமுறைகளை பின்பற்றியே குழந்தை பெற்றுக்கொண்டதாக அறிக்கை வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

First published:

Tags: Director vignesh shivan, Nayanthara