• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா - வைரலாகும் புகைப்படங்கள்!

5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா - வைரலாகும் புகைப்படங்கள்!

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

  • Share this:
    5-வது வருட காதலில் அடியெடுத்து வைத்துள்ளது நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி

    நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடியாக வலம் வருகின்றனர்.ரானும் ரவுடி தான் படத்தின் போது இருவருக்கும் ஏற்பட்ட காதல் தற்போது 5 -வது ஆண்டை எட்டியுள்ளது.

    இருவரும் பிசியாக இருந்தாலும் இடையிடையே வெளிநாடுகளுக்குச் சென்று விடுமுறை நாட்களைக் கழிப்பதில் இருந்து கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதைப் பார்க்கும் ரசிகர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்வியை எழுப்புவதையும் தவறுவதில்லை.

    இந்நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் விக்னேஷ் சிவன், “என் அழகான ஸ்டோரிக்கு 5 வயதாகிறது. காத்துவாக்குல எப்படி போனது என்றே தெரியவில்லை. இந்த 5 வருடத்தில் நிறைய அழகான ஞாபகங்கள் இருக்கின்றன. உன்னுடைய காதல் மற்றும் அன்பினால் தினமும் நமக்கு காதலர் தினம் தான்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவு வைரலாகியுள்ளது.




    தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் அறிவிப்பும் நேற்று வெளியானது. காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர்.

    மேலும் பார்க்க: ‘என் காதலர்’... ஜூவாலா கட்டாவின் பதிவுக்கு விஷ்ணு விஷால் ரியாக்‌ஷன்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: