Home /News /entertainment /

காதலோட கடைசி நாள்.. இந்த வலி தேவை தான்! விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவு

காதலோட கடைசி நாள்.. இந்த வலி தேவை தான்! விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவு

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

”என் லவ்வுடன், பேபியுடன் கடைசி 5 நாட்கள். இந்த வலி தேவை தான்” என விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

    ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் 1 வாரம் மட்டுமே உள்ள நிலையில் அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனின் எமோஷனல் பதிவு இணையத்தில் வைரலாகி, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    கிட்டத்தட்ட சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 28 அன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் நயன்தாரா, சமந்தா இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர். படத்தின் சிங்கிள், டீசர், டிரைலர் எல்லாமே மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடியுள்ளது. இதுவரை விக்னேஷ் சிவன் திரைக்கதையில் வெளியான அனைத்து படங்களுமே இளைஞர்களை மிகப் பெரிய அளவில் ஈர்த்து இருந்தது. போடா போடி, நானும் ரவுடி தான் போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் புதிய ட்ரெண்ட் செட்டர்.

    janaki amma: திரையிசை பாடகர்களில் மகுடம்சூடா மகாராணி எஸ். ஜானகி பிறந்தநாள்!

    ஒருபக்கம் காதல்,ரொமான்ஸ் என விக்கி பிஸியாக இருந்தாலும் மறுபுறம் தனது கெரியரில் இடைவிடாமல் கவனம் செலுத்தி வருகிறார். விக்கியும் நயன்தாரவும் தயாரித்து வெளியிட்ட ராக்கி திரைப்படம் விமர்சனம் ரீதியாக பெரும் பாராட்டுக்களை பெற்று இருந்தது. அதுமட்டுமில்லை இவர்களின் தயாரிப்பில் வெளியாகாத கூழாங்கல் திரைப்படம் விருதுகளை வாரி குவித்து வருகிறது. இப்படி தமிழ் சினிமாவுடன் சேர்ந்து எல்லா விதத்திலும் பயணித்துக் கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன், சோஷியல் மீடியாவில் செம்ம ஆக்டிவ்

    சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியாவுக்கு இவ்வளவு கஷ்டங்களா?

    அவரின் இன்ஸ்டா போஸ்டுகளை பார்த்தாலே தெரியும். இப்படி இருக்கையில், தன்னுடைய நீண்ட நாள் உழைப்பில் வெளிவரவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை பற்றி விக்கியின் இன்ஸ்டா பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் விக்கி குறிப்பிட்டிருப்பதாவது, “ படம் வெளியாவதற்கு முன்பு இருக்கும் இந்த 5 நாட்கள் தான் பிரசவ வலியை போன்றது. என் லவ்வுடன், பேபியுடன் கடைசி 5 நாட்கள். இந்த வலி தேவை தான். ஏனென்றால் காதல் என்றாலே வலி இருக்கும்.



    இசையமைப்பாளர் அனிருத்துடன் தொடர்ச்சியாக ஒவ்வொரு திரைப்பட காட்சியையும் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டிருக்கிறேன். அனைவரும் இந்த படத்தில் அருமையாக நடித்து இருக்கின்றனர்.இந்த படத்திற்காக நேசத்துடன் அதிகம் உழைத்திருக்கிருக்கிறேன்” என்று கேப்ஷனுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை திரையில் பார்க்கும் புகைப்படத்தையும் விக்கி பகிர்ந்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Director vignesh shivan, Kollywood, Nayanthara

    அடுத்த செய்தி