• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Valimai: அஜித்தின் வலிமையில் இயக்குநர் விக்னேஷ் சிவன்?

Valimai: அஜித்தின் வலிமையில் இயக்குநர் விக்னேஷ் சிவன்?

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

நேற்று மாலை ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது.

  • Share this:
    அஜித்தின் ‘வலிமை’ படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பணியாற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நேற்று மாலை ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. வெகுநாள் காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் விருந்தாக இருந்தது. சமூக வலைதளங்களில் வலிமை ஃபர்ஸ்ட் லுக்கை கொண்டாடி தீர்த்து விட்டனர் அஜித் ரசிகர்கள்.

    இந்நிலையில் ’வலிமை’ படத்தில் இயக்குனர் விக்னேஷ் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ’மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு பாடல் எழுதிய விக்னேஷ் சிவன், தற்போது வலிமை படத்தில் அஜித்துக்காக பாடல் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: