ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கடவுளின் ஆசியால் நயனும், நானும் ஒன்றிணைந்தோம் - விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சி பதிவு!

கடவுளின் ஆசியால் நயனும், நானும் ஒன்றிணைந்தோம் - விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சி பதிவு!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஓட்டல் ரிசார்ட்டில் இன்று காலை நடைபெற்றது.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  நடிகை நயன்தாராவை திருமணம் செய்தது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

  நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஓட்டல் ரிசார்ட்டில் இன்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்க நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

  திருமண நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ஷாரூக்கான், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  நயன்தாராவை 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு முன்பு இன்ஸ்டாவில் நயன்தாராவின் புகைப்படங்களை பகிர்ந்து தன் மனதில் தோன்றுவதை பதிவிட்டிருந்தார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Vignesh Shivan (@wikkiofficial)  அதில் ‘கடவுளுக்கு நன்றி! ஒவ்வொரு நல்ல உள்ளமும், ஒவ்வொரு நல்ல தருணமும், ஒவ்வொரு நல்ல தற்செயல் நிகழ்வும், ஒவ்வொரு நல்ல ஆசீர்வாதமும்,படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும், வாழ்க்கையை அழகாக்கிய ஒவ்வொரு பிரார்த்தனையும் ! நல்ல வெளிப்பாடுகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்!தற்போது இவை அனைத்தையும் நயன்தாராவுக்கு சமர்ப்பிக்கிறேன்.என் வாழ்க்கையின் புதிய தொடக்கத்தை தொடங்கவும் ஆவலாக காத்திருக்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தார்.

  மேலும், திருமணத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம் செய்யப்பட்டிருந்தன. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். திருமணம் நடைபெற்ற தனியார் ரிசார்ட்டை சுற்றிலும் பாதுகாப்பு அதிகம் செய்யப்பட்டிருந்தது.

  Also read... நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண விழாவின் முக்கிய நிகழ்வுகள்!

  இந்நிலையில் இந்து மத முறைப்படி 25 புரோகிதர்கள் மந்திரம் முழங்க விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு தாலி கட்டினார். புகைப்படங்களை வெளியிட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது திருமண புகைப்படத்துடன் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை விக்னேஷ் சிவன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Vignesh Shivan (@wikkiofficial)  அதில், 10 என்ற அளவில்… அவள் நயன் & நான் தான் ஒன்று என்றும் கடவுளின் அருளால் திருமணம் செய்துகொண்டதாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Director vignesh shivan, Nayanthara