ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

காதல் மனைவி நயன்தாராவுக்கு பிரியாணி பார்ட்டி கொடுத்த விக்னேஷ் சிவன்!

காதல் மனைவி நயன்தாராவுக்கு பிரியாணி பார்ட்டி கொடுத்த விக்னேஷ் சிவன்!

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

படங்களை பொறுத்தவரை நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நயன்தாராவுக்கு பிரியாணி பார்ட்டி கொடுத்திருக்கிறார் அவரது காதல் கணவர் விக்னேஷ் சிவன். 

    2016 ஆம் ஆண்டு திருமணத்தை பதிவு செய்த நடிகை நயன்தாரா மற்றும் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் இந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அக்டோபர் 9-ஆம் தேதி வாடகைத் தாய் மூலம் தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர்.

    இதற்கிடையே சென்னையிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் நயனுக்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் அவரது கணவர் விக்னேஷ் சிவன். புதிய நட்சத்திர பெற்றோர்களான இவர்கள் உணவருந்திய பின், ஹோட்டல் ஊழியர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    துணிவு டப்பிங்கில் பிக் பாஸ் அமீர்!

    படங்களை பொறுத்தவரை நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அதோடு சத்யராஜுடன் இணைந்து 'கனெக்ட்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவனை பொறுத்தவரை, அஜித் குமார் நடிக்கும் ஏகே62 திரைப்படத்தை இயக்கவிருக்கிறார்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Nayanthara, Vignesh Shivan