நயன்தாராவுக்கு உணவு ஊட்டி விடும் ரொமாண்டிக் வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே நெருக்கம் உண்டானது. பின்னர் அது காதலாக மாறியது.
காதல் மலர்ந்து 6 ஆண்டுகள் ஆன நிலையில், சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கியிருந்தார் விக்கி. இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நயன்தாராவும் சமந்தாவும் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்.
இதற்கிடையே ஜூன் 2-ம் வாரத்தில் நயன் - விக்கி இருவரும் திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நிறைய கோயில்களுக்கு சென்று வரும் அவர்கள், விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோயிலிலும் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.
விஜய்யுடன் மீண்டும் இணையும் வெற்றி இயக்குநர்?
இந்நிலையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் விக்கி. மகாபலிபுரத்தில் உள்ள கடல் உணவு உணவகத்தில் வித விதமான உணவுகளை சாப்பிடும் விக்னேஷ் சிவன், அதனை ரொமாண்டிக்காக நயன்தாராவுக்கும் ஊட்டி விடுகிறார். அந்த வீடியோவைப் பகிர்ந்த விக்கி, “நன்றாக சாப்பிடும் நேரம். சிறந்த உள்ளூர் உணவை அவளுக்கு ஊட்டி விடுவதுதான் மகிழ்ச்சி! பிடித்த கடல் உணவுகளை நாங்கள் சாப்பிட விரும்பும் ஒரே இடம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.