Home /News /entertainment /

நயன்தாரா தயாரிப்பில் நடிக்கும் கவின், வாணி போஜன்?

நயன்தாரா தயாரிப்பில் நடிக்கும் கவின், வாணி போஜன்?

வாணி போஜன். கவின்

வாணி போஜன். கவின்

அறிமுக இயக்குனர் இந்தப் படத்தை இயக்குகிறார். விரைவில் படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட உள்ளன. 

  • News18
  • Last Updated :
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்சர்ஸின் புதிய படத்தில் கவின், வாணி போஜன் நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

நானும் ரௌடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது, அதில் நாயகியாக நடித்த நயன்தாராவுடன் காதல் ஏற்பட்டது. அதிலிருந்து இன்றுவரை இருவரும் சேர்ந்தே வசித்து வருகிறார்கள்.

ரௌடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களும் தயாரிக்கிறார்கள். அவர்கள் தயாரித்த கூழாங்கல் என்ற படம் பல சர்வதேச விருதுகளைப் பெற்றது. நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான நெற்றிக்கண் படத்தையும் ரௌடி பிக்சர்ஸே தயாரித்திருந்தது.

இவர்களின் அடுத்தத் தயாரிப்பில் கவின் நாயகனாக நடிப்பதாகவும், வாணி போஜன் நாயகியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் இந்தப் படத்தை இயக்குகிறார். விரைவில் படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட உள்ளன

Also read... சிம்பு, கௌதம் கார்த்திக்கின் பத்து தல புதிய அப்டேட்!

பீட்சா படத்தில் சின்ன வேடத்தில் தோன்றிய கவின் நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். சில தினங்கள் முன்பு அவர் நடித்த லிப்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது.

இயக்குனர் நெல்சனின் டாக்டர் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த இவர் தற்போது பீஸ்ட் படத்திலும் பணியாற்றி வருகிறார். ஆகாஷவாணி வெப் தொடரிலும் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actress Vani Bhojan, Kavin

அடுத்த செய்தி