ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்.. பாதுகாப்புப் பணியில் 80க்கும் மேற்பட்ட பவுன்சர்கள்!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்.. பாதுகாப்புப் பணியில் 80க்கும் மேற்பட்ட பவுன்சர்கள்!

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

vigensh shivan nayanthara wedding : கடற்கரை வழியாக யாரும் உள்ளே நுழைய கூடாது என்பதற்காகவும், புகைப்படம் எடுத்துவிட கூடாது என்பதற்காகவும் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இன்னும் சற்று நேரத்தில் மாமல்லபுரம் அருகில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொடங்க இருக்கின்றது. திருமணம் நடைபெறும் கடற்கரை விடுதியின் முன்புறம், கடற்கரைப் பகுதி என அனைத்து இடத்திலும் பவுன்சர்கள் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமண விழாவிற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தனியார் காவலர்களான பவுன்சர்கள் 80க்கும் மேற்பட்டவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் .

மண்டபத்திற்கு உள்ளே மட்டுமின்றி , மண்டபத்திற்கு பின்புறம் கடற்கரை வழியாக யாரும் உள்ளே நுழைய கூடாது என்பதற்காகவும், புகைப்படம் எடுத்துவிட கூடாது என்பதற்காகவும் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .மேலும் மண்டபத்தின் உள்ளேயும் விருந்தினர்கள் யாரும் புகைப்படம் எடுத்துவிடாமல் இருப்பதற்காக பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

Nayanthara : நிஜத்தில் விக்னேஷ்.. ஆன் ஸ்கிரீனில் நயனின் பெஸ்ட் ஜோடி யார் தெரியுமா?

நயன் - விக்கி திருமணத்தை தனியார் ஓடிடி சேனல் நேரடியாக ஒளிப்பரப்புகிறது. அதனால் தான் விருந்தினர்களுக்கு இவ்வளவு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லை திருமண புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் அதற்கு முன்பு புகைப்படங்கள் ஆன்லைனில் லீக் ஆக கூடாது என்பதிலும் நயன் - விக்கி உறுதியாக இருக்கிறார்கள். கல்யாணத்தில் எல்லா விஷயத்தை பார்த்து பார்த்து வித்தியாசமான ஏற்பாடுகளை செய்துள்ளது இந்த காதல் ஜோடி. தண்ணீர் பாட்டலில் தொடங்கி செட் , சாப்பாடு என பிரம்மாண்டத்தின் உச்சமாக இன்று விக்கி - நயன் திருமணம் நடைப்பெறவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Kollywood, Nayanthara, Tamil Cinema, Vignesh Shivan