Home /News /entertainment /

சிபிராஜ் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் வித்யாசாகரின் மகன் ஹர்ஷ வர்தன்!

சிபிராஜ் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் வித்யாசாகரின் மகன் ஹர்ஷ வர்தன்!

ஹர்ச வர்தன்

ஹர்ச வர்தன்

ஹர்ஷ வர்தன் கடந்த பல வருடங்களாக இசைத்துறையில் தான் பணியாற்றி வருகிறார்.

இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷ வர்தன், சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

சிபி நடிப்பில் கடைசியாக கபடதாரி திரைப்படம் வெளிவந்தது. மாயோன், ரங்கா, வட்டம், ரேஞ்சர் உள்ளிட்ட படங்கள் வெளிவரவுள்ளன. இதில் முதலில் மாயோன் திரைப்படம் வெளிவரும் என கூறப்படுகிறது. இதில் தொல்லியல் துறை அதிகாரியாக சிபி நடித்துள்ளார். தான்யா நாயகி. இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படங்களை தொடர்ந்து அறிமுக இயக்குனர் பாண்டியன் ஆதிமூலம் இயக்கும், புதிய படத்தில் சிபி நடிக்க உள்ளார். இவரது 20 படமாக இது தயாராகிறது. பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் இதனை தயாரிக்கிறார்.

அப்பாவாகப் போகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் பிரபலம்... கவனம் பெறும் வளைகாப்பு படங்கள்!

இந்தப் படத்தில் பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷ வர்தன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஹர்ஷ வர்தன் கடந்த பல வருடங்களாக இசைத்துறையில் தான் பணியாற்றி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷ், தமன் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுக்கு கீபோர்டு புரோகிராமராக இருந்துள்ளார். இசையமைப்பாளராக இது அவரது முதல் திரைப்படம். பின்னணி இசைக்கு அதிக வாய்ப்பு இருந்ததால் இந்தப் படத்தை ஆர்வத்துடன் ஒத்துக் கொண்டதாக அவர் கூறியுள்ளார். ஆக்சன் த்ரில்லராக இந்தப்படம்  தயாராகிறது.

Arabic Kuthu: யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடம், 20 மில்லியன் நிகழ்நேர பார்வைகள்... கலக்கும் விஜய்யின் அரபிக் குத்து!

படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி