’அஜித் 59’ படத்தில் நடிக்க ஓகே சொன்னது ஏன்? வித்யாபாலன் விளக்கம்!

பிங்க் படத்தில் அமிதாப்பச்சன் நடித்திருந்த கேரக்டரில் நடிகர் அஜித் நடிக்கிறார்.

’அஜித் 59’ படத்தில் நடிக்க ஓகே சொன்னது ஏன்? வித்யாபாலன் விளக்கம்!
வித்யா பாலன்
  • News18
  • Last Updated: January 19, 2019, 6:47 PM IST
  • Share this:
அஜித்தின் 59-வது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதன் காரணத்தை நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார்.

சிவா - அஜித் கூட்டணியில் 4-வது முறையாக வெளியான படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படம் ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தை அடுத்து அஜித், வினோத் இயக்கும் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான பணிகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளன. இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். பிங்க் படத்தில் அமிதாப்பச்சன் நடித்திருந்த கேரக்டரில் அஜித் நடிக்கிறார். படத்தின் 3 முக்கிய கதாநாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதில் டாப்ஸி நடித்த கதாபாத்திரத்தில் நடிகை நஸ்ரியா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடிக்க நடிகை வித்யாபாலன் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தில் இணைந்தது குறித்து வித்யாபாலன் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: பொதுவாக எனக்கு ரீமேக் படங்களில் நடிப்பதில் உடன்பாடில்லை. ஆனால் இந்தப் படத்தில் சிறப்பான கேரக்டர் ஒன்று இருப்பதாக கூறி போனி கபூர் என்னை அழைத்தார். அவருடைய அழைப்பை என்னால் மறுக்க முடியவில்லை. அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதை காரணமாகவே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தில் என்னுடைய கேரக்டர் சிறியதுதான் என்றாலும் அவருக்காக இந்த கேரக்டரில் நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சி என்றார் வித்யாபாலன்.

இந்தப் படம் மே மாதத்தில் அஜித்தின் பிறந்த நாளன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.பேட்ட VS விஸ்வாசம்… வசூலில் ரஜினியை வென்றாரா அஜித்? - வீடியோ

First published: January 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்