Sherni: தனுஷின் ஜகமே தந்திரத்துக்கு போட்டியாக வெளியாகும் வித்யா பாலனின் ஷெர்னி

தனுஷ் - வித்யா பாலன்

யூ-ட்யூபும், ஓடிடியும் தனுஷை தேசிய நடிகராக உயர்த்தியுள்ளது. தமிழர்கள் அளவுக்கு இந்தி பேசும் ரசிகர்களும் அவரது படத்தைப் பார்க்கிறார்கள்.

  • Share this:
    தொலைக்காட்சிகளில் இருந்த போட்டி இப்போது ஓடிடியிலும் வந்துள்ளது. ஜுன் 18-ம் தேதி தனுஷின் ஜகமே தந்திரம் வெளியாவதற்கு போட்டியாக, வித்யாபாலனின் ஷெர்னி படத்தை களமிறக்குகிறது அமேசான் பிரைம் வீடியோ.

    ஒரு தொலைக்காட்சியில் முன்னணி நடிகரின் படம் ஒளிபரப்பானால் அதற்குப் போட்டியாக அதே நடிகரின் ஏதாவது படத்தை ஒளிபரப்புவது போட்டி தொலைக்காட்சிகள் செய்யும் வியாபார யுக்தி. ஒரு தொலைக்காட்சியில் சினிமா விருது விழா ஓடிக்கொண்டிருக்கும். சேனலை மாற்றினால், இன்னொரு தொலைக்காட்சியிலும் அதே நிறுவனம் நடத்தும் விருது விழா ஓடும். ஒரே நிறுவனத்தின் விருது விழா எப்படி இரண்டு தொலைக்காட்சியில் என்று உற்றுப் பார்த்தால் தான், இன்னொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது பத்து வருடங்களுக்கு முன் நடந்த விழாவாக இருக்கும். அப்போது அவர்கள் காசு கொடுத்து அந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையை வாங்கியிருப்பார்கள். தொலைக்காட்சியில் நடக்கும் இந்த வியாபார போட்டி இப்போது ஓடிடிக்கும் வந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    யூ-ட்யூபும், ஓடிடியும் தனுஷை தேசிய நடிகராக உயர்த்தியுள்ளது. தமிழர்கள் அளவுக்கு இந்தி பேசும் ரசிகர்களும் அவரது படத்தைப் பார்க்கிறார்கள். ஆங்கில சப் டைட்டிலால் நடந்த நல்விளைவு இது. வரும் 18-ஆம் தேதி தனுஷின் ஜகமே தந்திரம் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இந்த மாதம் நெட்பிளிக்ஸ் வெளியிடும் திரைப்படங்கள், சீரிஸ்களின் மொத்த எண்ணிக்கை 115. இதில் ஆங்கிலம், ஸ்பானிஸ், பிரெஞ்ச் முதல் தமிழ், தெலுங்கு, இந்தி வரை அனைத்து மொழிகளும் அடக்கம். இதில் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படுவது தனுஷின் ஜகமே தந்திரம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் இதனை வெளியிடுகிறது. ஆங்கில சப்டைட்டில் இருப்பதால் ஆங்கிலம் தெரிந்த, இந்தி பேசும் ரசிகர்களும் படத்தை புரிந்து ரசிக்கலாம்.

    ஜகமே தந்திரத்துக்கு போட்டியாக அமேசான் பிரைம் வீடியோ வித்யாபாலனின் ஷெர்னி திரைப்படத்தை வெளியிடுகிறது. வித்யாபாலன் அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தை அமித் மஸுர்கர் இயக்கியுள்ளார். இவர் உள்ளூரிலும், சர்வதேச அளவிலும் பல விருதுகளை வாங்கிய நியூட்டன் படத்தை இயக்கியவர். இதன் காரணமாக ஷெர்னி படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்திய திரைப்பட ரசிகர்கள் ஜுன் 18-ல் ஒட்டு மொத்தமாக ஜகமே தந்திரத்தில் குவிவதை தடுக்க அமெசான் பிரைம் வீடியோ இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. நேற்றுவரை ஷெர்னி வெளியீட்டு தேதியை அறிவிக்காமல் இருந்தவர்கள், இன்று தேதியை அறிவித்ததோடு ட்ரெய்லரையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

    தனுஷுடன் வித்யாபாலன் மோதி வெற்றி பெறுவாரா பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: