அஜித் பட நடிகைக்கு இப்படி ஒரு ரசிகையா ?

அஜித் பட நடிகைக்கு இப்படி ஒரு ரசிகையா ?
வித்யா பாலன்
  • News18
  • Last Updated: February 12, 2019, 6:34 PM IST
  • Share this:
அஜித் நடிக்கவிருக்கும் பிங்க் திரைப்படத்தின் ரீமேக்கில் பாலிவுட் நடிகை வித்யா பாலனும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வந்தன. வித்யா பாலனுக்கும் தமிழில் இதுதான் முதல் படம்.

பாலிவுட்டில் வித்யாபாலனுக்கு ரசிகர் கூட்டம் அதிகம். அந்த வகையில் ஒரு ரசிகை வித்யா பாலனில் முகத்தை கையில் பச்சைக் குத்தியிருக்கிறார். இதைக் கண்டு மகிழ்ந்த வித்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய புகைப்படங்களை ஷேர் செய்திருக்கிறார்.
அதுமட்டுமன்றி அதில் அந்த ரசிகைக்கு நன்றி சொல்லியிருக்கிறார்.

மேலும் அதில் “ என் மீதான காதலை இவ்வளவு அழகாக யாரும் வெளிப்படுத்தியதில்லை. இப்படி நான் எதிர்பார்த்ததும் இல்லை. அதேசமயம் பச்சைக் குத்திக் கொள்ளும் போது மிக வலி ஏற்பட்டிருக்கும். அதை நினைத்து நான் வருத்தமடைகிறேன். உங்களுடைய கண்ணீரும், சிரிப்பும் என் இதயத்தைத் தொட்டுவிட்டன. நன்றி மது மற்றும் கடவுளின் வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும். மில்லியனிற்கு மேல் உங்கள் மீது அன்பு ஏற்பட்டுள்ளது “ இவ்வாறு அந்த ஷேர் ஸ்டேட்டஸில் குறிப்பிட்டுள்ளார் வித்யாபாலன்.
First published: February 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்