ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Viduthalai: 'என் வாழ்வின் முக்கிய தருணம்’ விடுதலை குறித்து சூரி நெகிழ்ச்சி!

Viduthalai: 'என் வாழ்வின் முக்கிய தருணம்’ விடுதலை குறித்து சூரி நெகிழ்ச்சி!

சூரி

சூரி

விடுதலை திரைப்படத்தின் மூலம் தன் வாழ்வில் முக்கியாமன தருணத்தை ஏற்படுத்தித் தந்த இயக்குநர் வெற்றிமாறன், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோருக்கு நடிகர் சூரி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  விடுதலை திரைப்படத்தின் மூலம் தன் வாழ்வில் முக்கியாமன தருணத்தை ஏற்படுத்தித் தந்த இயக்குநர் வெற்றிமாறன், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோருக்கு நடிகர் சூரி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

  அசுரன் படத்தைத் தொடர்ந்து, ‘பாவக் கதைகள்’ என்ற ஆந்தாலஜி படத்தின் ஒரு கதையை இயக்கிய வெற்றிமாறன், தற்போது சூர்யாவின் வாடிவாசல், சூரி நாயகனாக நடிக்கும் படம் ஆகியவற்றில் பிஸியாகியுள்ளார். இதற்கிடையே விஜய்க்காக கதை ஒன்றை தயார் செய்து வருவதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

  இதற்கிடையே சூரி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சத்யமங்கலம் வனப்பகுதியில் படமாக்கப்பட்டது. இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு நிலவிய காலநிலை காரணமாக அதிலிருந்து அவர் விலகினார். பின்னர் கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கப்பட்டார். தவிர ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ-யும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா. இதுவரை ஜி.வி.பிரகாஷ் மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் பணிபுரிந்துள்ள வெற்றிமாறன் முதன் முதலில் இளையராஜாவுடன் இணைந்துள்ளார்.

  இந்நிலையில் இன்று இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் அறிவிக்கப்பட்டது. அதாவது சூரி - வெற்றிமாறன் படத்துக்கு ‘விடுதலை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கிடையே படத்தின் போஸ்டரை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள சூரி, “என் வாழ்வில் இந்த முக்கிய தருணத்தை ஏர்படுத்திக்குடுத்த இயக்குனர் வெற்றிமாறன் அண்ணனுக்கும், இசைஞானி ஐயா இளையராஜா சார் அவர்களுக்கும், எல்ரெட் குமார் சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். புதிய பரிமாணத்தில் மாமா விஜய் சேதுபதியுடன் இணைவதில் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Soori, Director vetrimaran