முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: இணையத்தை கலக்கும் 'விடுதலை' படத்தில் இளையராஜா பாடிய காட்டுமல்லி பாடல்!

Video: இணையத்தை கலக்கும் 'விடுதலை' படத்தில் இளையராஜா பாடிய காட்டுமல்லி பாடல்!

காட்டுமல்லி பாடல்

காட்டுமல்லி பாடல்

Viduthalai Part 1 - Kaattumalli Lyric | மெலோடியாக உருவாகியிருக்கும் இந்தப் பாடலானது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படம் ‘விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் காட்டு மல்லி என்ற பாடல் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. இளையராஜா எழுதிய பாடியுள்ள இந்தப் பாடலில் அனன்யா பட் இணைந்து பாடியுள்ளார்.  முதல் பாடல் போலவே இந்தப் பாடலின் லிரிக் வீடியோவிலும் வரிகள் தமிழிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. மெலோடியாக உருவாகியிருக்கும் இந்தப் பாடலானது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. யூடியூப்பில் இந்தப் பாடல் 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

' isDesktop="true" id="907786" youtubeid="n6NkluQDUbU" category="cinema">

நன்றி: Sony Music South.

First published:

Tags: Director vetrimaran, Ilaiyaraja