ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'பெரியாரைப் படிக்கணும்....' சன் டிவி சீரியலில் பெரியாருக்கு பூஜை - வைரலாகும் வீடியோ

'பெரியாரைப் படிக்கணும்....' சன் டிவி சீரியலில் பெரியாருக்கு பூஜை - வைரலாகும் வீடியோ

இனியா - சன் டிவி தொடர்

இனியா - சன் டிவி தொடர்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முற்போக்கு கருத்துகள் அதிகம் பேசும் படங்கள் வருவதைப் போல டிவி சீரியல்களும் வருவது நம்பிக்கைக்குரியதாக பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

பொதுவாகவே டிவி சீரியல்கள் பிற்போக்குத்தனமாக இருப்பதாக ஒரு கருத்து உண்டு. ஆனால் அதனை சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சன் டிவி சீரியல் ஒன்று தகர்த்தெறிந்திருக்கிறது. சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் 'இனியா' என்ற தொடரிலிருந்து வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.

இதையும் படிக்க | மகேஷ் பாபு வீட்டில் ஹீரோயின் ரெடி... கவனம் பெறும் புகைப்படங்கள்!

அந்த வீடியோவில், ''பெண் ஒருவர் கோவிலுக்கு செல்லாததால் தனது கணவர் திட்டுவார் என பயந்து ஆட்டோவில் இருக்கும் பெரியார் படத்தின் முன் தேங்காய் உடைத்து அவரது படத்துக்கு ஊதுபத்தி காட்டுகிறார். பின் பெரியார் படத்தின் முன் பேசும் அந்தப் பெண், நான் உங்கள் புத்தகங்களைப் படித்ததில்லை. படித்திருந்தால் கணவருக்கு அடிமையாக இருந்திருக்க மாட்டேன். நீங்கள் ஒரு ஆணாக இருந்துகொண்டு பெண் அடிமைத்தனத்தைப் பற்றி பேசுகிறீர்கள்'' என்று பாராட்டி பேசுகிறார்.

இந்த வீடியோவைப் பகிர்பவர்கள், பெண்கள் அதிகம் பார்க்கும் டிவி சீரியலில் முற்போக்கு கருத்துகள் பேசுவது பாராட்டுக்குரியது என்று தெரிவித்துவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஜி.வி.பிரகாஷின் 'பேச்சுலர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த கொற்றவை இந்த வீடியோவைப் பகிர்ந்து, ''சன் தொலைக்காட்சித் தொடரில் பெரியார். பெண் விடுதலை பெற பெரியாரைப் படிக்கணும் என்று ஒரு தொலைக்காட்சி தொடரில் வருகிறதென்றால் பாராட்டுக்குரியது. சரிகம தயாரிப்பில் சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இனியா என்னும் தொடரில் இந்த முற்போக்கு சிந்தனை வந்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான பி.ஆர்.அம்பேத்கர் என்ற சீரியல் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முற்போக்கு கருத்துகள் அதிகம் பேசும் படங்கள் வருவதைப் போல டிவி சீரியல்களும் வருவது நம்பிக்கைக்குரியதாக பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Periyar, Sun TV, TV Serial