விஸ்வாசம் ரூ.125 கோடி வசூல் பொய்யானதா?.... போட்டு உடைத்த பிரபல விநியோகிஸ்தர்

விஸ்வாசம் ரூ.125 கோடி வசூல் பொய்யானதா?.... போட்டு உடைத்த பிரபல விநியோகிஸ்தர்
அஜித்
  • News18
  • Last Updated: September 8, 2019, 12:04 PM IST
  • Share this:
விஸ்வாசம் படத்தின் வசூல் குறித்து பிரபல விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த பொங்களன்று அஜித் நடிப்பில் விஸ்வாசம் மற்றும் ரஜினி நடிப்பிப் பேட்ட ஆகிய திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானாலும் 2 படங்களும் வசூலில் சாதனை படைத்தது.

விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்த தகவலை சத்யஜோதியிடமிருந்து படத்தை வாங்கி வெளியிட்ட கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்தது. 8 நாட்களில் ரூ.125 கோடி வசூல் என்று இந்நிறுவனம் கூறியது.
இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த பிரபல விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம், படத்தின் தயாரிப்பாளரிடம் படத்தை வாங்கிய நிறுவனம் வசூல் என்று ரூ.80 கோடியை தந்தது. அதற்கு தயாரிப்பாளர் நீங்கள் ரூ.125 கோடி வசூல் என்று அறிவித்தீர்களே என்று கேட்ட போது, அது சும்மா ரசிகர்களுக்காக சொன்னது. உண்மையான வசூல் இவ்வளவு தான் என்று படத்தை வெளியிட்ட நிறுவனம் சொன்னதாக’ கூறியுள்ளார்.

First published: September 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...